Tuesday, September 13, 2016

திருமணம், விவாகரத்து மற்றும் மறுதிருமணத்தையும் பற்றி வேதாகமம் என்ன சொல்லுகிறது?

அருமையானவர்களே, நமது இந்திய பண்பாட்டில் திருமணம் என்பது சடங்காக மட்டுமில்லாமல், இரு ஜீவன்கள் கடவுள் கொடுத்த ஆயுள் வரை இன்ப-துன்பங்களில் இணைந்து வாழ்க்கை நடத்த வேண்டும் என்பதை அடிப்படையாக கொண்டுள்ளது. அதே சமயத்தில் ஒவ்வொருவர் வாழ்விலும் பிரச்னைகள் வரும் சமயத்தில் அதன் தீர்வுக்கு சட்டம் அவசியமாகும். அதை கருத்தில் கொண்ட பல சாதி, மதம், மொழியினர் ஒருமரத்து பறவையாக கூடி வாழும் இந்திய திருநாட்டில், ஒவ்வொரு மதத்தினருக்கும் தனித்தனியாக திருமண சட்டங்கள் வகுத்து செயல்படுத்தி வருகிறோம். அதன்படி கிறிஸ்துவ திருமண சட்டம் 1872ன் கீழ் பல அம்சங்கள் சொல்லப்பட்டுள்ளது.  சரி, இன்றைய கிருஸ்துவ சமுதாயம் புறஜாதிகளை போல அல்ல, மிகவும் அதிகமாக இந்த விவாகரத்தை(Divorce) செய்துவருவது வருத்தத்துக்குரியது. நீதிமன்றங்களில், தினசரி செய்திதாளில், ஊடகங்களில் அதிகம் தெரிவது கிருஸ்துவ குடும்பங்களின் சீரழிவுகள். ஒருவேளை ஒரு குறிப்பிட்ட ஊடகம் ஒருமணிநேரம் இந்த காரியங்களை விவாதிப்பதிலேயே தங்களின் TRP விகிதம் கூடுவதற்காக அதிகமாக கிருஸ்துவ குடும்பங்களை தெரிந்தெடுத்து ஒளிபரப்பு செய்கிறார்கள்.  இதில் அதிகம் பாதிப்பு அடைந்தவர்கள் யார் எனில், காதல் திருமணம் புரிந்தவர்கள் தான் என்றால் அது மிகை ஆகாது. அன்பானவர்களே, நாம் இந்த பாவத்திலிருந்து மீள்வதற்கு என்ன தான் வழி என்று வேதம் சொல்லுகிறது. முதலில் திருமணம், விவாகரத்தை பற்றியும் பிறகு மறுதிருமணத்தை பற்றியும் பார்ப்போம்.

வேதாகமத்தின்படி, திருமணம் என்பது வாழ்க்கை முழுவதுக்குமான ஒரு ஒப்பந்தம். இப்படி இருக்கிறபடியால்,  அவர்கள் இருவராயிராமல், ஒரே மாம்சமாயிருக்கிறார்கள்ஆகையால், தேவன இணைத்ததை மனுஷன் பிரிக்காதிருக்கக்கடவன் என்றார். (மத்தேயு 19:6).

எபேசியர் 5:28 அப்படியே, புருஷர்களும் தங்கள் மனைவிகளைத் தங்கள் சொந்தச் சரீரங்களாகப் பாவித்து, அவர்களில் அன்புகூரவேண்டும்; தன் மனைவியில் அன்புகூருகிறவன் தன்னில்தான் அன்புகூருகிறான்.
மத்தேயு 19:5 இதினிமித்தம் புருஷனானவன் தன் தகப்பனையும் தாயையும் விட்டுத் தன் மனைவியோடே இசைந்திருப்பான்; அவர்கள் இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள் என்று அவர் சொன்னதையும், நீங்கள் வாசிக்கவில்லையா.
எபிரெயர் 13:4 விவாகம் யாவருக்குள்ளும் கனமுள்ளதாயும், விவாகமஞ்சம் அசுசிப்படாததாயுமிருப்பதாக; வேசிக்கள்ளரையும் விபசாரக்காரரையும் தேவன் நியாயந்தீர்ப்பார்.
I கொரிந்தியர் 7:2 ஆகிலும் வேசித்தனம் இராதபடிக்கு அவனவன் தன் சொந்த மனைவியையும், அவளவள் தன் சொந்தப் புருஷனையும் உடையவர்களாயிருக்கவேண்டும்.
I கொரிந்தியர் 7:3 புருஷன் தன் மனைவிக்குச் செய்யவேண்டிய கடமையைச் செய்யக்கடவன்; அப்படியே மனைவியும் தன் புருஷனுக்குச் செய்யக்கடவள்.

இப்படியாக, திருமண பந்தத்தை பற்றி வேதம் நமக்கு திட்டமாக கூறுகிறது.

விவாகரத்தைப் பற்றி ஒருவர் எந்த கண்ணோட்டத்தை எடுத்துக்கொண்டாலும், மல்கியா 2:16 “தள்ளிவிடுதலை (விவாகரத்து) நான் வெறுக்கிறேன் என்று இஸ்ரவேலின் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார்” என்பதை முதலாவது நினைவிற்கொள்ள வேண்டும். கர்த்தர் ஒரு காரியத்தை வெறுக்கிறார் என்றால் அது பாவம் என்பதை முதலில் நாம் தெரிந்து கொள்ளவேண்டும்.

ஆனாலும், திருமணம் என்பது பாவத்தில் இருக்கிற இரு மனிதர்களைப் பற்றியது என்பதால் விவாகரத்துக்கள் நடக்கும் என்பதையும் கர்த்தர் உணர்ந்திருக்கிறார். வெவேறான சூழ்நிலைகளில் இருந்து வந்த இரு மனமும், ஒரு மனுமும் ஒரு உடலுமாக ஆவதுதான் திருமண பந்தம். நமது கடந்த கால சூழ்நிலைகளை இப்பொழுது நினைத்து ஆதங்கபடுவதும், கடந்த காலங்களை மறக்க முடியாமல் இருப்பதும் கிடைத்த சூழ்நிலையை புரிந்துகொண்டு பயன்படுத்த தெரியாமலும் இருப்பதுதான் இந்த பந்தம் கெடுவதற்கு முக்கிய காரணமாகின்றன. எந்த சூழ்நிலைகளிலும் மனரம்மியமாயிருக்க பழகவேண்டும். அதுதான் ஆண்டவர் விரும்பிகிற, பவுல் அப்போஸ்தலன் சொன்ன கிருஸ்தவ வாழ்கை.

பழைய ஏற்பாட்டிலேயே, விவாகரத்து செய்தவர்களின், குறிப்பாக பெண்களின், உரிமைகளைப் பாதுகாப்பதெற்கென, அவர் சில கட்டளைகளை விதித்திருந்தார் (உபாகமம் 24:1-4).

உபாகமம்  24 :  1. ஒருவன் ஒரு ஸ்திரீயை விவாகம் பண்ணிக்கொண்ட பின்பு, அவளிடத்தில் இலச்சையான காரியத்தைக் கண்டு, அவள்மேல் பிரியமற்றவனானால், அவன் தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிடலாம்.  2. அவள் அவனுடைய வீட்டைவிட்டுப் போனபின்பு, வேறொருவனுக்கு மனைவியாகலாம்.  3. அந்த இரண்டாம் புருஷனும் அவளை வெறுத்து, தள்ளுதலின் சீட்டை எழுதி, அவள் கையிலே கொடுத்து, அவளைத் தன் வீட்டிலிருந்து அனுப்பிவிட்டாலும், அவளை விவாகம்பண்ணின அந்த இரண்டாம் புருஷன் இறந்துபோனாலும், 4. அவள் தீட்டுப்பட்ட படியினால், அவளைத் தள்ளிவிட்ட அவளுடைய முந்தினபுருஷன் திரும்பவும் அவளை மனைவியாகச் சேர்த்துக்கொள்ளக் கூடாது; அது கர்த்தருக்கு முன்பாக அருவருப்பானது; உன் தேவனாகியகர்த்தர்உனக்குச் சுதந்தரமாகக் கொடுக்கும் தேசத்தின்மேல் பாவம் வரப்பண்ணாயாக.

இது கர்த்தர் விரும்பினதால் அல்ல, மக்களுடைய கடின இருதயத்தினால் இந்த கட்டளைகள் கொடுக்கப்பட்டன என்பதை இயேசு சுட்டிக்காட்டினார் (மத்தேயு 19:8).
மத்தேயு 5:32 மற்றும் 19:9இல் கொடுக்கப்பட்டுள்ள இயேசுவின் வார்த்தைகளை வைத்தே வேதாகமத்தில் விவாகரத்துச் செய்யவும், மறு திருமணம் செய்துகொள்ளவும் அனுமதி இருக்கிறதா என்பதைப் பற்றிய சர்ச்சை எழுகிறது.?

மத்தேயு 5 :  32. நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; வேசித்தன முகாந்தரத்தினாலொழிய தன் மனைவியைத் தள்ளிவிடுகிறவன், அவளை விபசாரஞ்செய்யப் பண்ணுகிறவனாயிருப்பான்; அப்படித் தள்ளி விடப்பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்.

மத்தேயு 19 : 8. அதற்கு அவர்: உங்கள் மனைவிகளைத் தள்ளிவிடலாமென்று உங்கள் இருதயக்கடினத்தினிமித்தம் மோசே உங்களுக்கு இடம் கொடுத்தார்; ஆதிமுதலாய் அப்படி இருக்கவில்லை.  9. ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்; தள்ளிவிடப் பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

வேதாகமத்தில் இருக்கும்வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றிஎன்ற சொல் ஒன்று மாத்திரமே விவாகரத்துக்கும் மற்றும் அதினால் மறுதிருமணத்துக்கும் கர்த்தருடைய அனுமதியை வழங்குகிறது.

வேதத்திற்கு அர்த்தம் சொல்லுகிறவர்கள் இந்த “வேசித்தனம்” குறித்த “விலக்கு விதி” “நிச்சயதார்த்தம் நடந்து திருமணம் வரை” உள்ள காலத்தை குறிப்பதாகப் புரிந்துகொள்கிறார்கள்.  யூத மரபுப்படி, “நிச்சயதார்த்தம்” செய்துகொண்டாலே ஒரு ஆணும் பெண்ணும் திருமணம் செய்துகொண்டதாகப் பொருள். இந்தக் கண்ணோட்டத்தின்படி, விவாகரத்து செய்வதற்கு ஒரே சரியான காரணம், “நிச்சயதார்த்தம்” நடந்திருக்கும் காலத்திலே செய்யப்படும் வேசித்தனம் என்றாகிறது.  ஆனாலும், “வேசித்தனம்” என்று மொழிபெயர்க்கப்பட்ட கிரேக்கச் சொல், எல்லாவிதமான வேசித்தனப் பாவத்தையும் குறிக்கும். விபச்சாரம், வேசித்தனம் போன்றவற்றை அது குறிக்கலாம்.

வேசித்தனம் செய்யப்பட்டால் விவாகரத்தை அனுமதிக்கலாம் என்று இயேசு சொல்கிறார்போல் தெரிகிறது. பாலியல் உறவு திருமண ஒப்பந்தத்தின் ஒரு பகுதி: “இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்” (ஆதியாகமம் 2:24; மத்தேயு 19:5; எபேசியர் 5:31). எனவே, திருமணத்திற்கு வெளியே வைத்துக் கொள்ளப்படும் எந்த பாலியல் உறவும் விவாகரத்து செய்வதற்கான ஒரு காரணமாக அனுமதிக்கப்படலாம்.

இப்படியிருக்கு மெனில், இந்தப் பகுதியில் மறு திருமணத்தையும் மனதில் வைத்துக் கொண்டுதான் இயேசு பேசுகிறார்.  “வேறொருத்தியை விவாகஞ்செய்கிறவன்” (மத்தேயு 19:9) என்ற சொற்றொடர், விலக்கு விதியை எப்படி வேண்டுமானலும் புரிந்துகொண்டாலும் அது பயன்படுத்தப் படும்போது விவாகரத்து மற்றும் மறுதிருமணம் இரண்டும் அனுமதிக்கப்பட வேண்டும் என்பதைக் காட்டுகிறது.

இதில் முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவெனில் இருவரில் பாவம் செய்யாதவரே மறுதிருமணம் செய்துகொள்ள அனுமதிக்கப்படுகிறார்.

இங்கு எழுதப்பட வில்லையெனினும், விவாகரத்துக்குப் பின் மறுதிருமணம் செய்துகொள்ள அனுமதி என்பது யாருக்கும் எதிராக பாவம் செய்யப்பட்டதோ அவருக்கு கிடைக்கும் கர்த்தருடைய இரக்கமாகும், பாவம் செய்தவருக்கு அல்ல. “பாவம் செய்தவரை” மறுதிருமணம் செய்துகொள்ள அனுமதித்தது எங்காவது நடந்திருக்கலாம், ஆனால் இங்கு எழுதியிருப்பதில் அப்படிப் போதிக்கப்படவில்லை.   

அவிசுவாசியான கணவனோ மனைவியோ விசுவாசியான தன்னுடைய துணையை விவாகரத்து செய்யும்போது மறுதிருமணத்திற்கு அனுமதியை 1 கொரிந்தியர் 7:15இல் சொல்லப்பட்டுள்ள “விலக்கு” மூலம் அளிக்கப்படுவதாகச் சிலர் புரிந்துகொள்கிறார்கள்.

I கொரிந்தியர்  7 :   15. ஆகிலும், அவிசுவாசி பிரிந்துபோனால் பிரிந்துபோகட்டும், இப்படிப்பட்ட விஷயத்தில், சகோதரனாவது சகோதரியாவது அடிமைப் பட்டவர்களல்ல. சமாதானமாயிருக்கும் படிக்கே தேவன் நம்மை அழைத்திருக்கிறார். .... ஆனாலும் இது வேதாகமத்தில் காரணமாகக் கூறப்படவில்லை. இது இப்படியாகவே இருந்தாலும் கர்த்தருடைய வசனத்திலும் அப்படித்தான் கூறப்பட்டிருக்கும் என்று ஒரு ஊகத்தில் சொல்லுதல் சரியானதல்ல.

ஆனால் அங்கு கொடுக்கப்பட்டிருக்கும் சூழல், ஒரு அவிசுவாசி விசுவாசியான தன்னுடைய கணவரையோ மனைவியையோ விட்டுப்பிரிந்துபோக நினைத்தால் அந்த விசுவாசி திருமணத்தில் கட்டுப்பட்டிருக்க வேண்டிய அவசியமில்லை என்றுதான் கூறூகிறதே தவிர மறுதிருமணத்தைப் பற்றி குறிப்பிடவில்லை. சிலர் கொடுமைக்குள்ளாதலை (கணவனோ, மனைவியோ அல்லது குழந்தையோ) விவாகரத்துச் செய்வதற்கு தகுந்த காரணமாகக் கூறுகின்றனர். கணவன் ஒரு குடிகாரன், பண விரயம் செய்பவன், கோபக்காரன், போன்ற விவாதங்கள் நம்மிடையே இருப்பினும் அது சரியானதல்ல.

I கொரிந்தியர் 7:12  மற்றவர்களைக்குறித்துக் கர்த்தர் அல்ல, நானே சொல்லுகிறதாவது: சகோதரனொருவனுடைய மனைவி அவிசுவாசியாயிருந்தும், அவனுடனே வாசமாயிருக்க அவளுக்குச் சம்மதமிருந்தால், அவன் அவளைத் தள்ளிவிடாதிருக்கக்கடவன். 13. அப்படியே ஒரு ஸ்திரீயினுடைய புருஷன் அவிசுவாசியாயிருந்தும், அவளுடனே வாசமாயிருக்க அவனுக்குச் சம்மதமிருந்தால், அவள் அவனைத் தள்ளிவிடாதிருக்கக்கடவள்.14.  என்னத்தினாலெனில், அவிசுவாசியான புருஷன் தன் மனைவியால் பரிசுத்தமாக்கப்படுகிறான்; அவிசுவாசியான மனைவியும் தன் புருஷனால் பரிசுத்தமாக்கப்படுகிறாள். இல்லாவிட்டால் உங்கள் பிள்ளைகள் அசுத்தமாயிருக்குமே; இப்பொழுதோ அவைகள் பரிசுத்தமாயிருக்கின்றன.
I கொரிந்தியர் 7:27 நீ மனைவியோடே கட்டப்பட்டிருந்தால், அவிழ்க்கப்பட வகைதேடாதே; நீ மனைவி இல்லாதவனாயிருந்தால் மனைவியைத் தேடாதே. (நீயாக காதல் செய்யாதே என்பது பொருள்)
எபேசியர் 5:22 மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறதுபோல, உங்கள் சொந்தப் புருஷருக்குங் கீழ்ப்படியுங்கள்.
எபேசியர் 5:23 கிறிஸ்து சபைக்குத் தலையாயிருக்கிறதுபோல, புருஷனும் மனைவிக்குத் தலையாயிருக்கிறான்; அவரே சரீரத்திற்கும் இரட்சகராயிருக்கிறார்.
எபேசியர் 5:24 ஆகையால், சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதுபோல மனைவிகளும் தங்கள் சொந்தப் புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்.
எபேசியர் 5:25 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள்; அப்படியே கிறிஸ்துவும் சபையில் அன்புகூர்ந்து,
எபேசியர் 5:31 இதினிமித்தம் மனுஷன் தன் தகப்பனையும் தன் தாயையும் விட்டு, தன் மனைவியுடன் இசைந்து, இருவரும் ஒரே மாம்சமாயிருப்பார்கள்.
எபேசியர் 5:33 எப்படியும், உங்களிலும் அவனவன் தன்னிடத்தில் அன்புகூருவதுபோல, தன் மனைவியினிடத்திலும் அன்புகூரக்கடவன்; மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக்கடவள்.
கொலோசெயர் 3:18 மனைவிகளே, கர்த்தருக்கேற்கும்படி, உங்கள் புருஷருக்குக் கீழ்ப்படியுங்கள்.
கொலோசெயர் 3:19 புருஷர்களே, உங்கள் மனைவிகளில் அன்புகூருங்கள், அவர்கள்மேல் கசந்து கொள்ளாதிருங்கள் . I பேதுரு 3:1 அந்தப்படி மனைவிகளே, உங்கள்சொந்தப் புருஷர்களுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; அப்பொழுது அவர்களில் யாராவது திருவசனத்திற்குக் கீழ்ப்படியாதவர்களாயிருந்தால், பயபக்தியோடுகூடிய உங்கள் கற்புள்ள நடக்கையை அவர்கள் பார்த்து, 2.  போதனையின்றி, மனைவிகளின் நடக்கையினாலேயே ஆதாயப்படுத்திக்கொள்ளப்படுவார்கள்.  I பேதுரு 3:7 அந்தப்படி புருஷர்களே, மனைவியானவள் பெலவீன பாண்டமாயிருக்கிறபடியினால், உங்கள் ஜெபங்களுக்குத் தடைவராதபடிக்கு, நீங்கள் விவேகத்தோடு அவர்களுடனே வாழ்ந்து, உங்களுடனேகூட அவர்களும் நித்தியஜீவனாகிய கிருபையைச் சுதந்தரித்துக்கொள்ளுகிறவர்களானபடியினால், அவர்களுக்குச் செய்யவேண்டிய கனத்தைச் செய்யுங்கள்.
குடும்பம்:
மாற்கு 3:25 ஒரு வீடு(குடும்பம்) தனக்குத்தானே விரோதமாகப் பிரிந்திருந்தால், அந்த வீடு நிலைநிற்கமாட்டாதே. .....  குடும்பம் என்றால் ஒருவருடைய மனைவி, குழந்தைகள் அல்லது ஒருங்கினைந்து வாழும் சமுதாயம், முனைத்த பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச்சிறப்புக் குழு என்பது ஆகும். ஒரு குடும்பம் நன்றாக இருப்பதும் கெட்டுப்போவதும் அதன் உறுப்பினர் ஒவ்வொருவரையும் சாரும். குடும்ப ஜெபம் இல்லாத வீடு கூரை இல்லாத வீடு என்றே சொல்லலாம். பெரியவர்கள் சிறியவர்களுக்கு முன் ஊதாரணமாக இருக்கவேண்டும். நாம் அனுதின ஜெபம், வேதம் வாசிப்பது, பாடல் பாடுவது, அடுத்தவர்களிடமும் அன்பாக இருப்பது போன்ற காரியங்களில் பெற்றோர் பிள்ளைகளுக்கு மாதிரியாக இருக்கவேண்டும். உதாரணமாக நீங்கள் சிகரெட் பிடிப்பவராக இருந்தால் உங்கள் பிள்ளைகளை எப்படி அது தவறு, செய்யக்கூடாது என்று கூறுவீர்கள். நமது பிள்ளைகளை வறுமை தெரியாமல் வளர்க்கவேண்டும் என்பதில் தவறில்லை, ஆனால், நமது உழைப்பு தெரியாமல் வளர்ப்பது தவறு.
II தீமோத்தேயு 3 : 1. மேலும், கடைசிநாட்களில் கொடியகாலங்கள் வருமென்று அறிவாயாக.  2. எப்படியெனில், மனுஷர்கள் தற்பிரியராயும், பணப்பிரியராயும், வீம்புக்காரராயும், அகந்தையுள்ளவர்களாயும்,  தூஷிக்கிறவர்களாயும்,  தாய் தகப்பன்மாருக்குக் கீழ்ப்படியாதவர்களாயும், நன்றியறியாதவர்களாயும், பரிசுத்தமில்லாதவர்களாயும், 3. சுபாவ அன்பில்லாதவர்களாயும், இணங்காதவர்களாயும், அவதூறு செய்கிறவர்களாயும், இச்சையடக்கமில்லாதவர்களாயும், கொடுமையுள்ளவர்களாயும், நல்லோரைப் பகைக்கிறவர்களாயும்,  4. துரோகிகளாயும், துணிகரமுள்ளவர்களாயும், இறுமாப்புள்ளவர்களாயும், தேவப்பிரியராயிராமல் சுகபோகப்பிரியராயும்,   5. தேவபக்தியின் வேஷத்தைத் தரித்து அதின் பெலனை மறுதலிக்கிறவர்களாயும் இருப்பார்கள்; இப்படிப்பட்டவர்களை நீ விட்டு விலகு. 6. பாவங்களால் நிறைந்து, பற்பல இச்சைகளால் இழுப்புண்டு,  7. எப்போதும் கற்றாலும் ஒருபோதும் சத்தியத்தை அறிந்து உணராதவர்களாயிருக்கிற பெண்பிள்ளைகளுடைய வீடுகளில் இப்படிப்பட்டவர்கள் நுழைந்து, அவர்களை வசப்படுத்திக்கொள்ளுகிறார்கள்.
அதிகம் படித்துவிட்டோம் என அநேகர் நினைத்து தன்னைத்தான் ஒரு கன்னியிலே விழ வைக்கும் ஒரு கூட்டம் இன்றைய கிருஸ்தவ மக்களிடையேஇருக்கிறது.  ஆகவே பெண்கள்தான் அதிக கவனமாய் இருக்கவேண்டும். காதல் என்ற கன்னி வலையில் நம்முடைய பெண்கள் அநேகர் சிக்கிக்கொண்டு எதிர்கால வாழ்க்கையை இழந்து பரிதாபமாக இருக்கின்றனர். நாம் வாழும் இந்த ஒரே வாழ்க்கையில் முன்னேறி போகமுடியாது, ஆக இந்த மாதிரி சிக்கல்கள் வந்தால் பிற்கால/வருங்கால வாழ்க்கை பாதிப்பிற்குள்ளாக நேரிடும் மற்றுமல்ல உங்கள் குடும்ப மற்ற உறுப்பினர்களையும் அது பாதிக்கும். ஒரேயொரு வாழ்க்கைதான், அதை நன்றாக ஆண்டவர் விரும்பும் வகையில் அமைத்துக்கொண்டால் நமது சந்ததி ஆசிர்வதிக்கப்படும் நாமும் சாபம் நீங்கி ஆசிர்வதிக்கப்படுவோம்.
I தீமோத்தேயு 3 : 1. கண்காணிப்பை விரும்புகிறவன் நல்லவேலையை விரும்புகிறான், இது உண்மையான வார்த்தை.   2. ஆகையால் கண்காணியானவன் (a person who supervises others- A Good Husband) குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.   3. அவன் மதுபானப்பிரியனும், அடிக்கிறவனும், இழிவான ஆதாயத்தை இச்சிக்கிறவனுமாயிராமல், பொறுமையுள்ளவனும், சண்டைபண்ணாதவனும், பண ஆசையில்லாதவனுமாயிருந்து,   4. தன் சொந்தக் குடும்பத்தை நன்றாய் நடத்துகிறவனும், தன் பிள்ளைகளைச் சகல நல்லொழுக்கமுள்ளவர்களாகக் கீழ்ப்படியப்பண்ணுகிறவனுமாயிருக்கவேண்டும்.   5. ஒருவன் தன் சொந்தக் குடும்பத்தை நடத்த அறியாதிருந்தால், தேவனுடைய சபையை எப்படி விசாரிப்பான்?   ..7. அவன் நிந்தனையிலும், பிசாசின் கண்ணியிலும் விழாதபடிக்கு, புறம்பானவர்களால் நற்சாட்சி பெற்றவனாயுமிருக்கவேண்டும்.


வேசித்தனத்தின் பொருள் என்னவாக இருந்தாலும் அது விவாகரத்தை அனுமதிக்க மட்டுமே செய்கிறது, விவாகரத்து கட்டாயம் என்றாக்குவதில்லை என்பது விலக்கு விதியைப் பற்றிய விவாதங்களில் சில வேளைகளில் விட்டுப் போகின்றன.

விபச்சாரம் நடந்திருந்தாலும் கூட, கர்த்தருடைய கிருபையினால் ஒரு தம்பதியினர் மன்னிக்க கற்றுக்கொண்டு தங்களுடைய திருமணத்தை மீண்டும் கட்டியெழுப்ப முடியும். கட்டாயமாக அவருடைய மாதிரியைப் பின்பற்றி விபச்சார பாவத்தைக் கூட மன்னிக்க முடியும் (எபேசியர் 4:32).

எபேசியர் 4 : 32 ஒருவருக்கொருவர் தயவாயும் மனஉருக்கமாயும் இருந்து, கிறிஸ்துவுக்குள் தேவன் உங்களுக்கு மன்னித்ததுபோல, நீங்களும் ஒருவருக்கொருவர் மன்னியுங்கள். ஆனாலும், பல வேளைகளில், அந்த கணவனோ அல்லது மனைவியோ மனந்திரும்பாமல் வேசித்தனத்தைத் தொடர்கிறார்கள். அது போன்ற இடங்களில்தான் மத்தேயு 19:9ஐ பயன்படுத்த தேவை எழுகிறது. விவாகரத்து ஆனவுடன் மறுதிருமணம் செய்துகொள்ள பலர் அவசரப்படுகிறார்கள்.

ஆனால் கர்த்தரோ அவர்கள் தனியாய் இருக்க விரும்பலாம். சிலருடைய கவனம் சிதறாமல் இருக்க (1 கொரிந்தியர் 7:32-35) அவர்கள் தனிமையாயிருக்க கர்த்தரால் அழைக்கப் படுகிறார்கள். சில சூழல்களில் விவாகரத்துக்கு பின் மறுதிருமணம் செய்யலாம், ஆனால் கட்டாயம் மறுதிருமணத்தைத் தெரிவு செய்துகொள்ள வேண்டும் என்ற அவசியமில்லை.

1 கொரி  32. நீங்கள் கவலையற்றவர்களாயிருக்க விரும்புகிறேன். விவாகமில்லாதவன்கர்த்தருக்குஎப்படிப்  பிரியமாயிருக்கலாமென்று, கர்த்தருக்குரியவைகளுக்காகக் கவலைப்படுகிறான்.........  35. இதை நான் உங்களைக் கண்ணியில் அகப்படுத்தவேண்டுமென்று சொல்லாமல், உங்களுக்குத் தகுதியாயிருக்குமென்றும், நீங்கள் கவலையில்லாமல் கர்த்தரைப்பற்றிக் கொண்டிருக்க வேண்டுமென்றும், உங்கள் சுயபிரயோஜனத்துக்காகவே சொல்லுகிறேன். அவிசுவாசிகள் உலகத்தில் இருக்கும் அளவு விவாகரத்தின் எண்ணிக்கை விசுவாசிக்கிற கிறிஸ்தவர்கள் மத்தியிலும் அதிகமாக இருப்பது வேதனையளிக்கிறது.

கர்த்தர் விவாகரத்தை வெறுக்கிறார் என்பதையும் (மல்கியா 2:16) மன்னித்தலே ஒரு விசுவாசியின் வாழ்வின் அடையாளமாக இருக்கவேண்டும் (லூக்கா 11:4; எபேசியர் 4:32) என வேதாகமம் மிகத் தெளிவாகக் காட்டுகிறது. ஆனாலும், தன்னுடைய பிள்ளைகள் மத்தியுலும் விவாகரத்து நடைபெறும் என்பதைக் கர்த்தர் ஏற்றுக் கொள்கிறார்.

ஒரு விவாகரத்து அல்லது மறுதிருமணம் மத்தேயு 19:9இல் (9. ஆதலால், எவனாகிலும் தன் மனைவி வேசித்தனஞ்செய்ததினிமித்தமேயன்றி, அவளைத் தள்ளிவிட்டு வேறொருத்தியை விவாகம் பண்ணினால், அவன் விபசாரம் பண்ணுகிறவனாயிருப்பான்; தள்ளிவிடப் பட்டவளை விவாகம் பண்ணுகிறவனும் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.) கூறப்பட்ட விலக்கு விதியின் படியானது இல்லையென்றாலும், கர்த்தர் தம்மை குறைவாக அன்பு செய்கிறார் என விவாகரத்து செய்துகொண்ட அல்லது மறுதிருமணமும் செய்துகொண்ட விசுவாசி நினைக்க கூடாது.
மேலும் பல வசனங்கள் கணவன் மனைவி உறவு பற்றி வேதாகமத்தில் உள்ளது:

மாற்கு 10:11. அப்பொழுது அவர்: எவனாகிலும் தன் மனைவியைத் தள்ளிவிட்டு, வேறொருத்தியை விவாகம்பண்ணினால், அவன் அவளுக்கு விரோதமாய் விபசாரஞ்செய்கிறவனாயிருப்பான்;
ரோமர் 7:3 ஆகையால், புருஷன் உயிரோடிருக்கையில் அவள் வேறொரு புருஷனை விவாகம்பண்ணினால் விபசாரியென்னப்படுவாள்; புருஷன் மரித்தபின்பு அவள் அந்தப் பிரமாணத்தினின்று விடுதலையானபடியால், வேறொரு புருஷனை விவாகம் பண்ணினாலும் விபசாரியல்ல.
I கொரிந்தியர் 7:10 விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது.
I கொரிந்தியர் 7:36 ஆகிலும் ஒருவன் தன் புத்திரியின் கன்னிகைப்பருவம் கடந்துபோனதினாலே, அவள் விவாகம் பண்ணாமலிருப்பது அவளுக்குத் தகுதியல்லவென்றும், அவள் விவாகம்பண்ணுவது அவசியமென்றும் நினைத்தால், அவன் தன் மனதின்படி செய்யக்கடவன்; அது பாவமல்ல, விவாகம்பண்ணட்டும்.   

இருவரும் சேர்ந்து செய்யும் பாவம்:

அப்போஸ்தலர் 5:2 தன் மனைவி அறிய அவன் கிரயத்திலே ஒரு பங்கை வஞ்சித்து வைத்து, ஒரு பங்கைக் கொண்டுவந்து, அப்போஸ்தலருடைய பாதத்திலே வைத்தான்.     இதை வேறொரு கோணத்தில் பார்த்தால், அனனியா அவன் மனைவியாகிய சப்பீராளும் சேர்ந்து வஞ்சித்தார்கள் என்றால், கணவனும் மனைவியும் சேர்ந்து செய்யும் பாவம் என்பது பொருள்...இன்றைய நாட்களில் லஞ்சம் வாங்கும் ஆண்கள், வீட்டில் இருக்கும் பெண்களுக்கு தெரியாமல் வாங்குவது கிடையாது, அதுபோல, பெண்கள் வாங்கும் லஞ்சம், வீட்டில் இருக்கும் ஆண்களுக்கு தெரியாமல் இருக்காது. தெரிந்தே பாவம் செய்ய துணிகிறார்கள்.  இவை எல்லாம் பண ஆசையை சுற்றியே வருகிறது. அடுத்தவர்கள் வீட்டில் இருப்பதுபோல் பொருள்கள் வாங்க பேராசை படுவதும், நமது வருமானத்துக்கு தகுந்த செலவு செய்யாமல் மிகுந்த செலவு செய்வதும் காரணங்கள் ஆகும்.   I தீமோத்தேயு 6:10 பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது; சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் வேதம் சொல்லுகிறது, எபிரெயர் 13:5 நீங்கள் பண ஆசையில்லாதவர்களாய் நடந்து, உங்களுக்கு இருக்கிறவைகள் போதுமென்று எண்ணுங்கள்; நான் உன்னைவிட்டு விலகுவதுமில்லை, உன்னைக் கைவிடுவதுமில்லை என்று அவர் சொல்லியிருக்கிறாரே.

மேலும் வேதம் கணவன் மனைவியின் உறவின் ஆழத்தை கூறும்போது: -
 I கொரிந்தியர் 7:4 மனைவியானவள் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, புருஷனே அதற்கு அதிகாரி; அப்படியே புருஷனும் தன் சுயசரீரத்திற்கு அதிகாரியல்ல, மனைவியே அதற்கு அதிகாரி.
I கொரிந்தியர் 7:10 விவாகம்பண்ணிக்கொண்டவர்களுக்கு நானல்ல, கர்த்தரே கட்டளையிடுகிறதாவது: மனைவியானவள் தன் புருஷனை விட்டுப் பிரிந்துபோகக்கூடாது.
I கொரிந்தியர் 7:11 பிரிந்துபோனால் அவள் விவாகமில்லாதிருக்கக்கடவள், அல்லது புருஷனோடே ஒப்புரவாகக்கடவள்; புருஷனும் தன் மனைவியைத் தள்ளிவிடக்கூடாது.
I தீமோத்தேயு 3:2 ஆகையால் கண்காணியானவன் குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியை உடைய புருஷனும், ஜாக்கிரதையுள்ளவனும், தெளிந்த புத்தியுள்ளவனும், யோக்கியதையுள்ளவனும், அந்நியரை உபசரிக்கிறவனும், போதகசமர்த்தனுமாய் இருக்கவேண்டும்.

குடும்பம் பண்ணும் ஊழியம் செய்பவர்கள் மிகவும் கவனமாக இருக்கவேண்டும்:

I தீமோத்தேயு 3:12 மேலும், உதவிக்காரரானவர்கள் ஒரே மனைவியையுடைய புருஷருமாய், தங்கள் பிள்ளைகளையும் சொந்தக் குடும்பங்களையும் நன்றாய் நடத்துகிறவர்களுமாயிருக்கவேண்டும்.
தீத்து 1:6 மூப்பர், குற்றஞ்சாட்டப்படாதவனும், ஒரே மனைவியையுடைய புருஷனும், துன்மார்க்கரென்றும் அடங்காதவர்களென்றும் பேரெடுக்காத விசுவாசமுள்ள பிள்ளைகளை உடையவனுமாகிய ஒருவனிருந்தால் அவனையே ஏற்படுத்தலாம்.
 மாற்கு 6:18 யோவான் ஏரோதை நோக்கி: நீர் உம்முடைய சகோதரன் மனைவியை வைத்துக்கொள்வது நியாயமல்லவென்று சொன்னதினிமித்தம், ஏரோது சேவகரை அனுப்பி, யோவானைப்பிடித்துக் கட்டிக் காவலில் வைத்திருந்தான்.... இங்கே நாட்டை ஆளும் அரசியல்வாதிகள் மற்றும் அதிகாரிகளுக்கும் அதே நிலை தான், “நியாயம் இல்லை” என்பதை பாவம் என்று பொருள் கொள்ளலாம்.

பலவேளைகளில் கிறிஸ்தவர்களின் பாவத்தினால் ஏற்பட்ட கீழ்படியாமையை பல மேன்மையான நன்மைகளை அடைய கர்த்தர் பயன்படுத்துவார்.  ஆனால் கிருஸ்துவை உடையவர்களாக கிருஸ்துவர்கள் நடக்கும் போதுதான் கிறிஸ்து நம்மில் மகிழ்ந்திருப்பார், நாம் நீதிமான்கள் என்ற அந்தஸ்தை பெருவோம். I பேதுரு 3:12 கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள்மேல் நோக்கமாயிருக்கிறது, அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்குக் கவனமாயிருக்கிறது; தீமைசெய்கிறவர்களுக்கோ கர்த்தருடைய முகம் விரோதமாயிருக்கிறது.
என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு. பிலிப்பியர் 4:13

No comments:

Post a Comment